Skip to main content

ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ...

என்னமோ மாதிரியிருக்கு இந்த வார்த்தை நம்மில் பெரும்பாலானோர் பயன் படுத்தும் வார்த்தையாகிப்போய்விட்டது...

இப்படித்தான் ஒருவர் மெர்க்குரி லைட் கம்பத்தின் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன சார் தேடுறீங்க என்றார் அங்கு வந்த மற்றொருவர்.அதற்கு முதலாமவர் கூறுகிறார் மோதிரம் கீழே விழுந்திடுச்சு அதைத்தான் தேடுறேன் என்றாராம் தொலைத்தவர்.அக்கரறையாக விசாரித்த இரண்டாமவர் எங்க தொலைச்சீங்க என்று கேட்க , வீட்டுகிட்ட என்றாராம் முதாலமவர் அதற்கு ஏன் இங்கே தேடுறீங்க என்றதற்க்கு இங்கேதான் வெளிச்சமாய் இருக்கிறது என்றாராம் தொலைத்தவர்

இப்படித்தான் என்னமோ மாதிரியிருக்கு மனசுகளும் அமைதியாக உட்கார்ந்து ஆழமாக கவனித்தால் ஓ... இதுதான் விஷயம் இதுக்குத்தான் இவ்வளவு நெருடலா இருந்ததா என்று தீர்வுக்கு வரலாம் வெளிச்சம் இருக்கிற இடமாகப்பார்த்து தேடுற இடமாகப்பார்த்து தேடுற மாதிரி கோயிலிலும் ஹோட்டலிலும் கடற்கரையிலும் அதை தேடினால் கடைசி வரை உங்கள் மோதிரம் கிடைக்கப்போவதில்லை....

என்பது தொடங்கி

நான் அசிங்கம் என்ற அபிப்ராயத்தோடு நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் சுற்றமும் உங்களைப்பற்றி அப்படித்தானே நினைக்கும் நீங்களே உங்களைப்பற்றி உங்கள் மனம் உடல் பற்றி தரக்குறைவாக நினைக்கும் பொழுது அடுத்தவர்கள் அப்படி நினப்பதில் ஆச்சரியம் என்ன?

உங்கள் அகம் புறம் இரண்டையும் அணு அணுவாக நீங்களே ரசியுங்கள் காதலியுங்கள் முதலில் நீங்கள் உங்களை கவுரவமாகப்பாருங்கள் ஆராதியுங்கள் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பதன் ஆரம்ப புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனி மனித சுய கம்பீர விளக்கம்...

இன்னும் அன்பு செலுத்துதல்,பெறுதல்,வாழ்க்கைக்கு தேவையற்ற தாழ்வு மன்ப்பான்மையை களைதல்,எண்ணங்களை செயல்வடிவமாக்குதல்,புரிதல் பற்றியும் இன்னும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை நீயா நானா கோபிநாத் அவர்கள் இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கின்றார்...

கண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதனாக மாற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்....



Comments

Popular posts from this blog

மாயன் நாகரிகம்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும் . இப்பகுதி , தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா , ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது . கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே . கி . மு . 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது . மாயன் இனத்தவர் கணிதம் , எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் . மிக விசாலமான , நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும் . கி . பி . 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது . அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது . ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம் , விசித்திரமான மூட நம்பிக்கைகள் , பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள் . தற்காலத்தில் சுமார் ஆரு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ , குவாத்தமாலா போன

என்னை கண்டுபிடித்தால் 10 கோடி பரிசு

   அ ன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் கரைந்து போன வெல்லகட்டி எழுதும் கடிதம், நீங்கள் நலமா? நம் வீட்டின் பின்னால் வளர்ந்து நிற்கும் வாழைமர மடலுக்குள் பதிங்கியிருக்கும் தேரைக்குட்டி நலமா? அந்த தேரைக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு எந்த பாக்கியமும் இல்லை.       அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போன போது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாய் பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது.     உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விரல்களை மூடிக் கொண்டு வீறிட்டு அழுதது ஏன் தெரியுமா

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

   நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.   www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.   மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.  பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். இனி நீங்களும் கடவுளும்