Skip to main content

Posts

Showing posts from January, 2012

இன்கா தகவல் பரிமாற்றம்

இன்காக்களுக்கு நல்ல சாலை வசதி இருந்ததால் அவர்களால் சிறந்த அஞ்சல்துறையை உருவாக்க முடிந்தது. மிக விரைவாக செய்திகளை அனுப்பக்கூடிய நம்பகமான அஞ்சல்துறையை உருவாக்கி இருந்தனர். செய்தி அனுப்பும் முறை கியூப்பு கியூப்பு கயிறு முடிச்சுக்கள், Larco Museum Collection எழுத்தின் மூலம் செய்தி தெரிவிக்காமல், கியூப்பு என்ற கயிறு முடிச்சுக்களை கொண்டு சாசுகியூக்கள் தகவல் பரிமாற்றம் செய்தனர். அந்த சங்கேத முடிச்சுக்கள் கூறும் செய்தியை அனுப்பநரும் பெருநரும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சாசுகியூக்களாலும் கூட தெரிந்து கொள்ள முடியாது. சாசுகியூ சாசுகியூ ஓட்டக்காரர்கள் இன்காக்களின் தகவல் பரிமாற்றம் சாசுகியூ என்ற ஒற்றர் படையைச் சேர்ந்த ஓட்டக்காரர்களால் நடத்தப்பட்டது. 2 மைல் தொலைவுக்கு ஒருவர் என்ற வீதம் ஓடிச்சென்று செய்தியை அடுத்தவரிடம் தெரிவித்தனர். இந்த முறையின் மூலமே மாநில ஆளுநருக்கும் பேரரசிற்கும் தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. தேர்ச்சி மிக்க ஓட்டக்காரர்கள் இதற்காகவே தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருந்தனர். அவர்கள் ஒய்வெடுப்பதற்காக டோம்போ ஒய்வரை கோபுரங்கள் இருந்தன. டோம்போ டோம்போ கோபுரங்க...

இன்கா சாலை அமைப்பு

இன்கா சாலை அமைப்பு என்பது கொலம்பசுக்கு முந்தைய காலத்தில் தென்னமெரிக்காவின் மிகவும் மேம்பட்டதும் விரிவானதுமான இன்கா இனத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட சாலை அமைப்பாகும். இந்த அமைப்பு தென்வடலாகச் செல்லும் இரு சாலைகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு சாலைகளில் இருந்தும் பல கிளைகள் உள்ளன. இவற்றுள் நன்கு அறியப்பட்டது மாச்சு பிச்சுவிற்குச் செல்லும் பாதையாகும். இன்கா சாலையமைப்பு 40,000 கி.மீ சாலைகளை இணைத்ததுடன் 3,000,000 ச.கி.மீ பரப்பு நிலங்களை இணைத்தது. பெரும்பாலான சாலைகள் ஒன்றிலிருந்து நான்கு மீட்டர் அகலம் வரை இருந்தன. அழகிய சாலை எனப்பொருள் தரும் காப்பக் நன் என்ற சாலை இன்கா பேரரசின் முதன்மையான தென்வடல் சாலை ஆகும். இது ஆண்டிய மலைத்தொடரினைத் தொடரந்து 6,000 கி.மீ தொலைவு சென்றது. இச்சாலை இன்கா அரசு தனது படைகளை தனது தலைநகரில் இருந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அனுப்பப் பயன்பட்டது.

இன்கா பேரரசு

இன்கா பேரரசு ( Inca Empire ) என்பது கொலம்பிய காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காவின் ஒரு பேரரசாகும். கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது. இப்பேரரசின் தலைநகரம் கஸ்கோ ஆகும். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவின் உயர் பிரதேசத்தில் இப்பேரரசு அமைக்கப்பட்டது. 1438 முதல் 1533 வரையான காலப்பகுதியில் தென்னமெரிக்காவின் மேற்குப் பகுதிகள், ஆண்டீஇய மலைத்தொடரை மையப்படுத்திய பகுதிகள், தற்போதைய எக்குவாடோர் , பெரு ஆகியவற்றின் பெரும் பகுதிகள் பொலீவியாவின் மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகள், ஆர்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதி, சிலியின் வடக்கு மற்றும் வடமத்தியப் பகுதிகள் கொலம்பியாவின் தெற்குப் பகுதி போன்ற பெரு நிலப்பரப்பை இன்காக்கள் அமைதி வழியிலும், பலாத்காரமாகவும் கைப்பற்றி இன்கா பேரரசுடன் இணைத்திருந்தனர். இன்காக்கள் தமது அரசரை " சூரியனின் மகன்" என அழைத்தனர். இன்கா பேரரசு (1438–1527)   வரலாறு 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்க்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் கசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர்....

இன்கா படை

இன்கா படை என்பது இன்கா பேரரசினைக் காக்கவும், அதன் எல்லையை விரிவுபடுத்தவும், எதிரிகளைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு பல் இனப் படையாகும். இன்கா பேரரசு வளர்ந்ததைப் போலவே அதன் படைபலமும் அதிகரித்தது. இன்கா பேரரசு அதன் உச்சத்தில் இருந்த போது இன்கா படையில் 2 இலட்சம் பேர் இருந்தனர். இன்கா படையில் போர் வீரர்கள் முக்கிய இடம் வகித்தனர். இவர்களுக்கு உணவு, உடை, மற்றும் உணவு உற்பத்தி, வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இன்கா படையினர் போரில் வென்று தலைநகருக்குத் திரும்புகையில் பெண்களும் குழந்தைகளும் அவர்கள் வீரத்தினைப் போற்றி மரியாதை செய்தனர். கருவிகள் இன்கா படையினர் தாங்கள் சார்ந்திருந்த இனத்திற்கேற்ப வெவ்வேறு வகையான எளிய ஆயுதங்களைக் கையாண்டனர். பாதுகாப்பு தலைக்கவசம் மார்புக்கவசம் ஆயுதங்கள் கோடாரிகள் ஈட்டிகள் போலா எனப்படும் நுனியில் கற்களைக் கொண்ட கயிறு கவண்வில்

இன்கா நாகரிகம்

இன்கா நாகரிகம் தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். பெருவின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 1938 முதல் 1533 வரையான காலப்பகுதியில் போர்கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய ஈக்குவடோர் , பெரு, பொலிவியா , ஆர்ஜென்டீனா போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் கொலை செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது. 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது. மதம் சூரியனே இன்காக்களின் முதன்மையான கடவுள். இன்கா இனத்தவர் போருக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில கடவுளருக்கு படையல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். வேளாண்மை இன்கா மக்கள் வேளாண்மைக்கு ஒவ்வாத மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்தனர். இச்சிக்கலைத் தீர்க்க அவர்கள்...

மாயன் நாகரிகம்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும் . இப்பகுதி , தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா , ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது . கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே . கி . மு . 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது . மாயன் இனத்தவர் கணிதம் , எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் . மிக விசாலமான , நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும் . கி . பி . 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது . அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது . ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம் , விசித்திரமான மூட நம்பிக்கைகள் , பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள் . தற்காலத்தில் சுமார் ஆரு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ , குவாத்தமாலா போன...