Skip to main content

Posts

Showing posts with the label விஞ்ஞானம்

பெர்முடா முக்கோணம்!

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்! வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது!, இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந...

2012 - தான் உலகத்தின் இறுதி வருடமா ?

    தி ருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் வாயுலிங்கத்திற்கு எதிர்புறமாக அமைந்துள்ள அய்யனார் கோவிலில் உட்கார்ந்து இளைப்பாற  ஏகாந்தமாக மலையின் அழகை அருகிலிருந்து பார்த்து ரசிக்க நல்ல இடம்.  அந்த இடத்தில் ஒரு நாள் கல் படுக்கையின் மேல் உட்கார்ந்து இருந்தேன்.  தூய வெள்ளை ஆடையும், கழுத்தில்  காவி நிற துண்டும் போட்ட ஒரு இளைஞர் ஒரு சின்ன துண்டு பிரசுரத்தை நீட்டினார்.  வாங்கி படித்து பார்த்தேன.  2012-ல் உலகம் அழியும் என்று கொட்ட எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரி கண்வழியாக புகுந்து மனதை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டியது.       மேலும் அந்த துண்டு பிரசுரத்தில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி நடுப்பகல் 12-மணி, 12- நிமிடத்திற்கு உலகத்தில் பெரும்பகுதி அழிந்துவிடும் என்றும் அந்த பிரசுரத்தை வெளியிட்ட நிறுவனத்தில் சேர்ந்து நல்ல ஆத்மாவாக மாறிவிட்டால் உலக அழிவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.     இந்த மாதிரியான மிரட்டல் தகவல்கள் ஒன்றும் புதியதல்ல.  1980-ம்...