என்னமோ மாதிரியிருக்கு இந்த வார்த்தை நம்மில் பெரும்பாலானோர் பயன் படுத்தும் வார்த்தையாகிப்போய்விட்டது... இப்படித்தான் ஒருவர் மெர்க்குரி லைட் கம்பத்தின் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன சார் தேடுறீங்க என்றார் அங்கு வந்த மற்றொருவர்.அதற்கு முதலாமவர் கூறுகிறார் மோதிரம் கீழே விழுந்திடுச்சு அதைத்தான் தேடுறேன் என்றாராம் தொலைத்தவர்.அக்கரறையாக விசாரித்த இரண்டாமவர் எங்க தொலைச்சீங்க என்று கேட்க , வீட்டுகிட்ட என்றாராம் முதாலமவர் அதற்கு ஏன் இங்கே தேடுறீங்க என்றதற்க்கு இங்கேதான் வெளிச்சமாய் இருக்கிறது என்றாராம் தொலைத்தவர் இப்படித்தான் என்னமோ மாதிரியிருக்கு மனசுகளும் அமைதியாக உட்கார்ந்து ஆழமாக கவனித்தால் ஓ... இதுதான் விஷயம் இதுக்குத்தான் இவ்வளவு நெருடலா இருந்ததா என்று தீர்வுக்கு வரலாம் வெளிச்சம் இருக்கிற இடமாகப்பார்த்து தேடுற இடமாகப்பார்த்து தேடுற மாதிரி கோயிலிலும் ஹோட்டலிலும் கடற்கரையிலும் அதை தேடினால் கடைசி வரை உங்கள் மோதிரம் கிடைக்கப்போவதில்லை.... என்பது தொடங்கி நான் அசிங்கம் என்ற அபிப்ராயத்தோடு நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் சுற்றமும் உங்களைப்பற்றி அப்படித்தானே நினைக்கும் நீங்களே உ...