Skip to main content

ஆப்பிள் சொல்லும் மூன்று கதைகள்-ஸ்டீவ் ஜாப்ஸ்


                                                                                                                                             -muralee sekar
இதோ ஸ்டீவ் பேசுகிறார் ....

" நன்றி ! உலகின் மிக உன்னதமான் பல்கலைக் கழகங்களில் ஒன்றான இதன் ( ஸ்டான்ஃபோர்டு ) பட்டமளிப்புவிழாவில் இன்று உங்களுடன் இந்த நேரத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன் ( கூட்டம் குதுகலிக்கிறது ). உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இதற்கு முன்னர் நான் பல்கலைக் கழகங்களின் பட்டங்களைத் தொட்டவனல்ல . இதுதான் முதல் முறை .( கூட்டம் புன்னகைக்கிறது அவ்ரும் தான் ). இன்று உங்களுக்கு என் வாழ்க்கையிலிருந்து மூன்று கதைகள் சொல்லப் போகிறேன் . அவ்வளவுதான் . பெரிதாக ஒன்றுமில்லை . மூன்றே கதைகள் தான் .

           முதல் கதை " புள்ளிகள் இணைவதைப் " பற்றியது . நான் கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில் கல்லூரியை விட்டு வெளியேறினேன் . ஏன் ?. இது என் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டு இருந்தது . என் தாய் என்னைப் பெற்றெடுக்கும் பொழுது அவள் ஒரு மணமாகாத கல்லூரியில் படிக்கும் இளம் பெண் . நான் பிறந்ததும் என்னைத் தத்துக் கொடுக்க முடிவெடுத்துவிட்டாள் . என்னை கல்லூரியின் கல்விமான்களில் ஒருவர் தத்தெடுப்பார் என்று அவள் உறுதியாக நம்பியிருக்கக் கூடும் . நல்லவள் . அவள் நினைத்தது பலித்தது . என்னை ஒரு வழக்கறிஞரும் அவரது மனைவியும் தத்தெடுத்துக் கொள்ள சம்மதித்தனர் நான் பிறப்பதற்கு முன்னரே . அவர்கள் விரும்பியது ஒரு அழகான பெண் குழந்தையை . அவர்களின் துரதிஷ்டம் , நான் பிறந்தேன் . ஆனால் பின்புதான் என்னைப் பெற்றவளுக்குத் தெரிய வந்தது என் வளர்ப்பு தந்தை கல்லூரியைத் தாண்டாதவர் . வளர்ப்புத் தாயோ பள்ளியையேக் காணாதவர் . அதனால் என்னை பெற்ற மகராசி என்னை தத்துக் கொடுக்க சம்மதிக்கவில்லை . என்னை கண்டிப்பாக கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதாக உறுதி கூறியே என்னைத் தத்தெடுத்தார்கள் . இப்படித்தான் என் வாழ்க்கை தொடங்கியது . 17 வருடங்களுக்குப் பிறகு நான் கல்லூரியில் சேர்ந்தேன் . விவரம் புரியாமல் நானாகவே ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன் . அதுவும் இந்த " ஸ்டான்ஃபோர்டு " போன்றே செலவு மிகுந்தது . என்னை வளர்த்த பெற்றோர்களின் வாழ் நாள் சேமிப்பு முழுவதும் என் கல்லூரிக் கட்டணத்திற்கே செலவானது . ஆனால் ஆறே மாதத்தில் எனக்கு அந்தக் கல்லூரியில் பயில்வதில் எந்தப் பயனும் இல்லை என்று தோன்றியது . வாழ்க்கையில் என்ன செய்வதென்றே புரியவில்லை . என் பெற்றோரின் அத்தனை பணமும் காலி . சற்று பயமாக இருந்தது . கல்லூரியை விட்டு வெளியேறினேன் . இப்போது திரும்பிப் பார்த்தால் நான் வாழ்வில் எடுத்த மிகச் சிறந்த முடிவு அது .( கூட்டத்தில் சிரிப்பொலி ) எனக்குப் பிடித்ததைப் படிக்கத் தொடங்கினேன் . சில நேரங்களில் உறங்கக் கூட வழியில்லாமல் , நண்பர்களின் அறையின் தரையில் தூங்கினேன் . தெருவில் வீசப்பட்ட காலியான " கோக் " பாட்டில்களைச் சேர்த்து விற்று அந்தப் பணத்தில் பசியைப் போக்கினேன் . ஒவ்வொரு ஞாயிறும் 7 மைல்கள் நடந்து " ஹரே கிருஷ்ணன் " கோவிலுக்குச் செல்வேன் அங்கு அளிக்கப் படும் உணவிற்காக . எனக்கு மிகப்பிடித்த உணவு அது . என்னிடத்தில் இருந்த கற்கும் ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது . நான் படித்த கல்லூரியில் " காலிகிராஃபி " என்னும் அழகாக எழுதும் கலையைக் கற்றுக் கொடுத்தனர் . கல்லூரியின் சுவர்களும் , அறிவிப்புகளும் அத்தகைய அழகிய எழுத்துக்களையே தாங்கியிருக்கும் . அதில் சென்று சேர்ந்தேன் . அங்கு சில தட்டச்சு சூட்சமங்களைக் கற்றுத் தேர்ந்தேன் அதுவும் எனக்கு உடனே பெரிதாக துணை புரியவில்லை . ஆனால் 10 வ்ருடங்களுக்குப் பின்னர் , நாங்கள் " மாக் " கம்யூட்டர்களை உருவாக்கிய போது அன்று கற்ற கலை மிகவும் உதவியது . அதுதான் அழகிய எழுத்துருக்களைக் கொண்ட முதல் கம்யூட்டர் . நான் பிடித்ததைப் படிக்காமலிருந்தால் ஆப்பிள் இன்று அழகிய எழுத்துருக்களை இழந்திருக்கும் . மைக்ரோசாஃட்டு ம் இதனை திருடியிருக்க முடியாது . ( கூட்டம் ஆமோதித்து சிரிக்கிறது ). மொத்த்தில் கணிணி உலகமே இதைப் பெற்றிருக்காது . இவ்வாறு என் வாழ்வில் வைக்கப்பட்ட புள்ளிகள் இணைவதை நான் கல்லூரியில் இருந்த போது உணரவில்லை . எப்போதும் புள்ளிகள் வைக்கப்படும் போது புரிவதில்லை . வைக்கப்பட்ட புள்ளிகள் இணைக்கப்படும் போதே புரிகின்றன . உங்களின் உள்மனம் என்ன சொல்கிறதோ அதன்படிச் செல்லுங்கள் . முழுமையாக நம்புங்கள் . அது எண்ணமோ , தற்செயலோ , தெய்வமோ அல்லது கர்மாவோ அதனை முழுமையாக நம்புங்கள் . அது உங்களை உச்சங்களுக்கு இட்டுச் செல்லும் .



             எனது இரண்டாவது கதை , காதலையும் இழப்பையும் பற்றியது . எனது அதிர்ஷ்டம் . எனக்குப் பிடித்தது என்ன என்பதை இளவயதிலேயே கண்டுகொண்டேன் . எனது இருபதாவது வயதில் நானும் வாசும் சேர்ந்து எங்கள் வீட்டின் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் " ஆப்பிளைத் " தொடங்கிவிட்டோம் . கடினமாக உழைத்தோம் . விளைவாக , 10 வருடங்களுக்கு பிறகு , 2 பேருடன் தொடங்கிய அது , 4000 பேருடன் 2 மில்லியன் டாலர் கம்பெனியாக வளர்ந்தது . எனது 30 வது வயதில் " மாக் " கணிணியின் மிகச்சிறந்த படைப்பை வெளியிட்டோம் . சில நாட்களில் நான் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் . நீங்கள் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்து உங்களை எப்படி வெளியேற்ற முடியும் என்று நீங்கள் கேட்கலாம் . தொழில் நுட்பத்தில் சிறந்தவர்கள் சிலரை நிறுவனத்தில் சேர்த்தேன் . கடைசியில் அவர்களுடன் ஏற்பட்ட் கருத்து வேறுபாடு காரணமாக நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டேன் .   பகிரங்கமாக வெளியேற்றப்பட்டேன் . எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை . அடியுடன் பெயர்த்தெடுக்கப்பட்ட தோல்வி . அங்கிருந்து எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது . ஆனால் அந்த நிகழ்வு என்னுள் இருந்த தீயை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்தது . அடுத்த 5 வருடங்களில் " நெக்ஸ்ட் " என்ற எனது அடுத்த நிறுவனத்தை தொடங்கினேன் . " பிக்சார் " என்ற அடுத்து ஒரு நிறுவனத்தையும் தொடங்கினேன் . ஒரு அழகான பெண்ணிடம் காதலிலும் விழுந்தேன் . அவளே என் மனைவியாகும் வரமும் பெற்றேன் . " பிக்சார் " நிறுவனம் உலகின் முதல் அனிமேட்டட் திரைப்படமான " டாய் ஸ்டோரி " எடுக்கத் தொடங்கியது . அதன் வெற்றி உலகறிந்தது . இதில் பெரும் திருப்பமாக ஆப்பிள் , நெக்ஸ்டை வாங்கியது . நான் மீண்டும் ஆப்பிளுக்குள் நுழைந்தேன் . " நெக்ஸ்ட் "   ஆப்பிளின் மூளையாக செயல்படத் தொடங்கியது . நான் ஆப்பிளிலிருந்து வெளியேற்றப்படாவிட்டால் இதெல்லாம் சாத்தியமே இல்லை . சில நேரங்களில் வாழ்க்கை உங்களை ஓட ஓட துரத்தலாம் , ஓங்கியும் அடிக்கலாம் . ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள் . வாழ்க்கை முழுவதும் எனக்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே செய்தேன் . அதுதான் என்னை எந்த நேரத்திலும் தளரவிடாமல் காத்தது . நீங்கள் செய்யும் வேலையே உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை ஆட்கொள்ளப் போகிறது . அதனால் பிடித்ததை மட்டும் செய்யுங்கள் . அதுதான் உங்களை உயர்த்தும் . உங்களுக்குப் பிடித்தது எது என இன்னும் நீங்கள் கண்டுகொள்ளவில்லையா ? தேடிக் கொண்டே இருங்கள் . தளர்ந்துவிடாதீர்கள் .   தளர்ந்துவிடாதீர்கள் , தேடிக் கொண்டே இருங்கள் . ( பலத்த கைத்தட்டல்கள் )
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkwzwI1C7f81swExASHD2v6u7__-3rSon0261z2DBnU9wZKgoS2tixF6ivyjOx-KtWEsOB-fck3-roSpfdWpvW9-xDqB-ygjOc_EdDApQqUdo_gNE9uZqJkU2Ickupv_QodCiW4xwtbh4/s320/steve1.jpg


எனது மூன்றாவது கதை இறப்பினைப் பற்றியது . என் இளவயதில் படித்த ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது . அது " ஒவ்வொரு நாளையும் உங்களின் இறுதி நாள் போல வாழ்ந்தால் ஏதேனும் ஒரு நாள் உங்கள் வாழ்வின் பொன்னாளாகும் ". இது என்னை மிகவும் பாதித்தது . ஒவ்வொரு நாளும் காலையில் கண்ணாடி முன் நின்று " இது உன் வாழ் நாளின் கடைசி தினமாக இருந்தால் நீ என்ன செய்ய விரும்புவாய் ?" என்று என்னையே நான் கேட்டுக் கொள்வேன் . இதுவே என் வாழ்வின் மிக முக்கிய முடிவுகளை எடுக்கத் துணை புரிந்தது . எல்லா எதிர்பார்ப்புகளும் , பயங்களும் , தான் என்ற அகந்தையும் , தோல்விகளும் " இறப்பு " என்ற வார்த்தையின் முன் அர்த்தமற்றதாகின்றது . நாமும் ஒரு நாள் இறந்துபடுவோம் என்ற ஒரு எண்ணம் மற்றுமே தோல்விகளிலிருந்து உன்னை மீட்டெடுக்கும் . நம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை என்பதுதான் உரத்த உண்மை . ஒரு வருடத்திற்கு முன்னர்தான் எனக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது . கணையத்தில் புற்றுக் கட்டிகள் . எனக்கு கணையம் என்றால் என்ன என்பது கூடத் தெரியாது . இது ஒருவகையான குணப்படுத்தவியலாத புற்று நோய் என்று வல்லுனர்கள் கூறினார்கள் . ஆறுமாதத்திற்குத் தாங்கினாலே அதிகம் என்றனர் . எனது மருத்துவர் வீட்டிலிருந்து ஓய்வெடுக்கச் சொன்னார் . சுருங்கக் கூறினால் அவரது மொழியில் சாவிற்கு தயாராகச் சொன்னார் . அதன் பிறகு எனது பொழுதுகள் மருந்துகளில் விடிந்தது . ஒரு நாள் , குணப்படுத்தவியலாதது என்றுணரப்பட்ட புற்று நோய் மருந்துகளுக்கு கட்டுப்பட்டது . குணப்படுத்தவும் பட்டது . இதோ உங்கள் முன்னால் நிற்கிறேன் . ( கூட்டம் ஆர்பரித்தது ). இதுதான் சாவின் விளிம்பைத் தொட்ட ஒரு தருணம் . இந்த அனுபவத்தால் இன்னும் உறுதியாகச் சொல்கிறேன் , இறப்பு ஒரு அறிவார்ந்த அற்புதம் . யாரும் சாவதிற்கு விரும்புவதில்லை . சொர்க்கதிற்குச் செல்ல விரும்புவர்கள் கூட சாவதற்கு விரும்புவதில்லை . இறப்புதான் நாம் எல்லாரும் சேரும் ஒரு புள்ளி . இதில் யாரும் விதிவிலக்கல்ல . விலகிப்போவதுமில்லை . அந்த நாள் எந்த நாளாகவும் இருக்கலாம் . உண்மை சுடும் . மன்னிக்கவும் . உங்கள் வாழ்நாள் எண்ணப்படுகிறது . அதில் மற்றவரின் வாழ்வை வாழாதீர்கள் . உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள் . அதுக்கு மட்டும் தான் தெரியும் உங்களின் தேவை என்னவென்று . மற்றவையெல்லாம் இரண்டாம் பச்சம் . எங்கள் காலத்தில் மிகச்சிறப்பான புத்தகம் ஒன்று " மொத்த உலகின் பட்டியல் ". அது ஒரு புத்தக கூகுள் . அதன் கடைசி பதிப்பு எனக்கு உங்கள் வயதிருக்கும் பொழுது வெளியானது . அதன் கடைசிப்பக்கதில் ஒரு அழகிய காலைப் பொழுதின் படம் போட்டிருக்கும் . அதன் அடியில் ஒரு வாசகம் .  " பசித்திரு தனித்திரு " (Stay Hungry,Stay Foolish). நான் எப்பொழுதும் விரும்பியது அதைத்தான் . நான் உங்களுக்குக் கூற விரும்புவதும் அதைத்தான் .  " பசித்திரு தனித்திரு "

Thanks to:  
muralee sekar 
muraleearyan@gmail.com

Comments

Popular posts from this blog

என்னை கண்டுபிடித்தால் 10 கோடி பரிசு

   அ ன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் கரைந்து போன வெல்லகட்டி எழுதும் கடிதம், நீங்கள் நலமா? நம் வீட்டின் பின்னால் வளர்ந்து நிற்கும் வாழைமர மடலுக்குள் பதிங்கியிருக்கும் தேரைக்குட்டி நலமா? அந்த தேரைக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு எந்த பாக்கியமும் இல்லை.       அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போன போது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாய் பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது.     உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விர...

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

   நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.   www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.   மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.  பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். ...

ALL RESULTS

Get an all school and university result with the official website's. Tamil Nadu SSLC Result Tamil Nadu HSC Result Polytechnic College Result TNPSC Departmental Exam Result TNPSC All Exam Results Annamalai University Results Anna University Results Madras University Regular Results Madras University DDE Results Madurai Kamaraj University Regular Results Madurai Kamaraj University DDE Results Tamil Nadu Open University Results Manonmaniam Sundaranar University Results IGNOU Results Thiruvalluvar University Results