Skip to main content

இன்கா நாகரிகம்

இன்கா நாகரிகம் தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். பெருவின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 1938 முதல் 1533 வரையான காலப்பகுதியில் போர்கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய ஈக்குவடோர், பெரு, பொலிவியா, ஆர்ஜென்டீனா போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் கொலை செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது. 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது.

மதம்

சூரியனே இன்காக்களின் முதன்மையான கடவுள். இன்கா இனத்தவர் போருக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில கடவுளருக்கு படையல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர்.

வேளாண்மை

இன்கா மக்கள் வேளாண்மைக்கு ஒவ்வாத மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்தனர். இச்சிக்கலைத் தீர்க்க அவர்கள் பயிர் செய்வதற்கேற்ப மலைச்சரிவினை வெட்டிப் பயிர் செய்தனர். அவர்கள் நீர்ப்பாசன வசதிகளையும் செய்திருந்தனர். சோளம், உருளைக்கிழங்கு, பருத்தி, தக்காளி முதலியவற்றைப் பயிர் செய்தனர். இன்காக்களுடைய முதன்மையான உணவு உருளைக்கிழங்கு ஆகும். இன்கா நாகரிகமே உருளைக்கிழங்கை பயிர்செய்த முதல் நாகரிகம்.

ஆயுதங்களும் போர்முறையும்

இன்காக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவர்கள் மற்ற நாகரிகங்களுடன் போரிலும் ஈடுபட்டனர். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இன்காப் படையே மிகவும் வலிமையனதாக இருந்தது. ஏனெனில் அவர்களால் எந்த ஒரு உழவனையோ அல்லது குடிமகனையோ போர் வீரனாக மாற்ற முடிந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது ஒரு போரிலாவது பங்கேற்றிருக்க வேண்டுமென்ற ஒரு விதி இருந்தது.
இன்காக்கள் போருக்குச் செல்லும் போது முரசு கொட்டி கொம்பூதிச் சென்றனர். தலை, மார்புப் பகுதிகளுக்கு கவசங்களைப் பயன்படுத்தினர். கோடாரிகள், ஈட்டிகள், இரம்பம் போன்ற மரத்தாலான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இன்காக்களின் சிறந்த சாலையமைப்பு போர்வீரர்கள் விரைவாக நகர்வதற்கு உதவியது. மேலும் ஒரு நாளில் செல்லக்கூடிய தொலைவில் நிறைய தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நல்ல சாலைகளின் காரணமாக செய்தி கொண்டு செல்வோரும் விரைவாகச் சென்று வேகமான தகவல் தொடர்பு இருந்தது. சேவகர்கள் ஓடிச்சென்று தகவலை அடுத்தவரிடம் தர அவர் சிறு தொலைவு ஓடி அவருக்கு அடுத்தவரிடம் சேர்ப்பார். இவ்வாறு தகவல் சென்று சேர்க்கப்பட்டது. ஒரு நாளில் 240 கி.மீ வரை தகவல் கொண்டு செல்லப்பட்டது.
Thanks to: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா...

Comments

Popular posts from this blog

மாயன் நாகரிகம்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும் . இப்பகுதி , தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா , ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது . கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே . கி . மு . 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது . மாயன் இனத்தவர் கணிதம் , எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் . மிக விசாலமான , நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும் . கி . பி . 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது . அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது . ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம் , விசித்திரமான மூட நம்பிக்கைகள் , பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள் . தற்காலத்தில் சுமார் ஆரு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ , குவாத்தமாலா போன

என்னை கண்டுபிடித்தால் 10 கோடி பரிசு

   அ ன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் கரைந்து போன வெல்லகட்டி எழுதும் கடிதம், நீங்கள் நலமா? நம் வீட்டின் பின்னால் வளர்ந்து நிற்கும் வாழைமர மடலுக்குள் பதிங்கியிருக்கும் தேரைக்குட்டி நலமா? அந்த தேரைக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு எந்த பாக்கியமும் இல்லை.       அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போன போது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாய் பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது.     உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விரல்களை மூடிக் கொண்டு வீறிட்டு அழுதது ஏன் தெரியுமா

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

   நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.   www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.   மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.  பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். இனி நீங்களும் கடவுளும்