Skip to main content

இன்கா சாலை அமைப்பு

இன்கா சாலை அமைப்பு என்பது கொலம்பசுக்கு முந்தைய காலத்தில் தென்னமெரிக்காவின் மிகவும் மேம்பட்டதும் விரிவானதுமான இன்கா இனத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட சாலை அமைப்பாகும். இந்த அமைப்பு தென்வடலாகச் செல்லும் இரு சாலைகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு சாலைகளில் இருந்தும் பல கிளைகள் உள்ளன. இவற்றுள் நன்கு அறியப்பட்டது மாச்சு பிச்சுவிற்குச் செல்லும் பாதையாகும். இன்கா சாலையமைப்பு 40,000 கி.மீ சாலைகளை இணைத்ததுடன் 3,000,000 ச.கி.மீ பரப்பு நிலங்களை இணைத்தது. பெரும்பாலான சாலைகள் ஒன்றிலிருந்து நான்கு மீட்டர் அகலம் வரை இருந்தன.
அழகிய சாலை எனப்பொருள் தரும் காப்பக் நன் என்ற சாலை இன்கா பேரரசின் முதன்மையான தென்வடல் சாலை ஆகும். இது ஆண்டிய மலைத்தொடரினைத் தொடரந்து 6,000 கி.மீ தொலைவு சென்றது. இச்சாலை இன்கா அரசு தனது படைகளை தனது தலைநகரில் இருந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அனுப்பப் பயன்பட்டது.

Comments