Skip to main content

இன்கா தகவல் பரிமாற்றம்

இன்காக்களுக்கு நல்ல சாலை வசதி இருந்ததால் அவர்களால் சிறந்த அஞ்சல்துறையை உருவாக்க முடிந்தது. மிக விரைவாக செய்திகளை அனுப்பக்கூடிய நம்பகமான அஞ்சல்துறையை உருவாக்கி இருந்தனர்.

செய்தி அனுப்பும் முறை

கியூப்பு


கியூப்பு கயிறு முடிச்சுக்கள், Larco Museum Collection
எழுத்தின் மூலம் செய்தி தெரிவிக்காமல், கியூப்பு என்ற கயிறு முடிச்சுக்களை கொண்டு சாசுகியூக்கள் தகவல் பரிமாற்றம் செய்தனர். அந்த சங்கேத முடிச்சுக்கள் கூறும் செய்தியை அனுப்பநரும் பெருநரும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சாசுகியூக்களாலும் கூட தெரிந்து கொள்ள முடியாது.

சாசுகியூ


சாசுகியூ ஓட்டக்காரர்கள்
இன்காக்களின் தகவல் பரிமாற்றம் சாசுகியூ என்ற ஒற்றர் படையைச் சேர்ந்த ஓட்டக்காரர்களால் நடத்தப்பட்டது. 2 மைல் தொலைவுக்கு ஒருவர் என்ற வீதம் ஓடிச்சென்று செய்தியை அடுத்தவரிடம் தெரிவித்தனர். இந்த முறையின் மூலமே மாநில ஆளுநருக்கும் பேரரசிற்கும் தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. தேர்ச்சி மிக்க ஓட்டக்காரர்கள் இதற்காகவே தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருந்தனர். அவர்கள் ஒய்வெடுப்பதற்காக டோம்போ ஒய்வரை கோபுரங்கள் இருந்தன.

டோம்போ

டோம்போ கோபுரங்கள் ஒய்வறைகளாக மட்டும் அல்லாமல், அந்நாட்டில் எங்கு கலவரம் நடந்தாலும் அச்செய்திகளை தீமூட்டல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒரு இடமாகவும் இருந்தது. 20 மைல்களுக்கு ஒரு கோபுரம் வீதம் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் தனி கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்பட்டனர்.

எடுத்துக்காட்டு

  1. இன்காக்களின் துணைத்தலைநகரமான குவிட்டோ நகரில் நடந்த ஒரு கலவர நிலவரம், 4 மணி நேரங்களில் குவிட்டோவில் இருந்து 1700 கி.மீ. தொலைவில் இருந்த கஃசுகோ தலைநகரத்தில் உள்ள இன்கா பேரரசரின் காதுக்கு டோம்போ கோபுர கண்காணிப்பாளர்கள் மூலம் சென்றுவிட்டது.
  2. கியூப்பு அஞ்சல் துறை வசதி மூலம் ஒரு செய்தியை 250 மைல்கள் தாண்டி ஒரு நாளைக்குள் கொண்டு செல்ல முடிந்தது.

முடிவு

மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன் என மக்கள் கருதும்படியான ஆட்சிமுறை(theocracy) ந்டந்தது. இச்சூழ்நிலையிலே 177 வீரர்களுடன் மட்டுமே வந்த எசுபானிய தளபதி பிசாரோ அடஹுஅல்பா என்ற இன்கா மன்னரை கொன்றான். மக்கள் மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன், அவனையே கொன்று விட்டார்கள் என கருதியதால் மக்கள் கிளர்ந்தெழவில்லை. அதன் விளைவாக 433 ஆண்டுகள் சாயாதிருந்த இன்கா பேரரசின் முடி சாய்ந்தது.

    Comments