Skip to main content

உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….?



இதே கேள்வியை நாம் ஒவ்வொருவரும் யாரையாவது பார்த்து, எப்போதாவது கேட்டிருப்போம்.

ஒன்று அவர்களை நாம் முன்பே எங்காவது பார்த்து மறந்திருப்போம்..
இல்லையென்றால் நாம் பழகிய ஒருவரின் முகச்சாயலை அவர்ககொண்டிருப்பார்..!!

நாம் பழகிய ஒருவரின் முகம் நம் மனதில் ஆழப்பதிந்துவிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் ஒருவர் படித்துப் பிரிந்து 5 ஆண்டுகள் கழித்து ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஹலோ என்று சொன்னவுடனேயே அவரின் பெயரை அழைத்து நீங்கள் தானே என்றேன். வியந்து போய்விட்டார்.

வியந்துபோனது அவர் மட்டுமல்ல!
நானும் தான் எப்படி என்னால் முடிந்தது?

நன்கு பழகிய அவரின் குரலை என்மனம் எங்கோ ஆழப்பதிந்து வைத்திருக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.

இப்படி நம் ஆழ்மனப்பதிவுகள் ஆயிரம் ஆயிரம் வியப்புகளை உள்ளடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றன.

ஒருகதை,

பூனைகள் சேர்ந்து மாநாடு நடத்தின. பல நாடுகளிலும் இருந்து நிறைய பூனைகள் வந்திருந்தன. கூட்டம் தொடங்கியது.

தலைமை தாங்கிய பூனை மேடையில் தோன்றி பேசியது.

நாமெல்லாம் முழு நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நிச்சயமாக “எலிகள் மழையாகப் பொழியும்“ என்றது.

அவ்வளவு தான் எல்லா பூனைகளும் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தன.

இதனைப் பார்த்துக்கொண்டே அந்த வழியில் சென்ற நாய் ஒன்று சிரித்துக்கொண்டே சென்றது..

என்ன இது முட்டாள்த்தனம்?

என்றாவது எலிமழை பொழிந்திருக்கிறதா?

இவ்வளவு முட்டாள்தனம் நிறந்தவையாகப் பூனைகள் இருகும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை!

நம்பிக்கையோடு வேண்டினால் ஒருவேளை “எலும்பு மழை“ வேண்டுமானால் பொழியலாம்!

என்று மனதில் எண்ணியவாறு சென்றது நாய்.

என்றோ எங்கோ படித்த இந்தக் கதையை பலசூழல்களில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனைகள், நம்பிக்கைகள் அவரவர்களும் அதனை முழுவதும் நம்புகிறார்கள்.


மனதில் என்ன உள்ளதோ அதுதான் கனவில் மட்டுமல்ல, நினைவிலும் வரும்!

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருளெல்லாம் உணவாகத் தெரியும். காரணம் அவன் மனமெங்கும் பசி நிறைந்திருக்கிறது.

பூனைகளின் நினைவில் எப்போதும் எலிகள் தான்!
நாய்களின் மனதில் எப்போதும் எலும்பு தான்!

அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒன்று நிறைந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

மாயன் நாகரிகம்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும் . இப்பகுதி , தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா , ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது . கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே . கி . மு . 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது . மாயன் இனத்தவர் கணிதம் , எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் . மிக விசாலமான , நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும் . கி . பி . 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது . அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது . ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம் , விசித்திரமான மூட நம்பிக்கைகள் , பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள் . தற்காலத்தில் சுமார் ஆரு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ , குவாத்தமாலா போன

ALL RESULTS

Get an all school and university result with the official website's. Tamil Nadu SSLC Result Tamil Nadu HSC Result Polytechnic College Result TNPSC Departmental Exam Result TNPSC All Exam Results Annamalai University Results Anna University Results Madras University Regular Results Madras University DDE Results Madurai Kamaraj University Regular Results Madurai Kamaraj University DDE Results Tamil Nadu Open University Results Manonmaniam Sundaranar University Results IGNOU Results Thiruvalluvar University Results

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

   நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.   www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.   மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.  பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். இனி நீங்களும் கடவுளும்