நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு. www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும். பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். ...
Comments
Post a Comment