அ ன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் கரைந்து போன வெல்லகட்டி எழுதும் கடிதம், நீங்கள் நலமா? நம் வீட்டின் பின்னால் வளர்ந்து நிற்கும் வாழைமர மடலுக்குள் பதிங்கியிருக்கும் தேரைக்குட்டி நலமா? அந்த தேரைக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு எந்த பாக்கியமும் இல்லை. அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போன போது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாய் பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது. உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விர...
Comments
Post a Comment